பக்கம் எண் :

204கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

56
உறங்கிய வீணை

(நெருக்கடி நிலையிற் பாடியது)

உறங்கிய வீணையில் அடங்கிய ஓசையை
ஒருநாள் கைவிரல் எழுப்பும்-செவி
மறவா இனிமையைக் கொடுக்கும்-அது
மாந்தரின் நெஞ்சினில் நிலைக்கும்

எழுப்பிய ஓசையை அடக்கிடும் ஆசையில்
எழுந்தால் மனமிகத் துடிக்கும்-தரும்
இடரால் விழிபுனல் வடிக்கும்-பின்
சுடர்போல் உணர்வுகள் வெடிக்கும்

மீட்டிய விரல்களை வாட்டிட நினைத்தால்
மேதினி எவ்விதம் பொறுக்கும்?-அது
தீ தென வேசொலி வெறுக்கும்-பின்
தீமைகள் யாவையும் ஒறுக்கும்

இனிமையில் மூழ்கிய இருசெவி அடைத்தால்
இசைதனை மனமா மறக்கும்?-ஆசை
எழுமடங் கலவோ பிறக்கும்!-பின்
இடர்தரும் யாவும் பறக்கும்

26.11.1976