208 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
60 இருவகை மயக்கம் (கள்ளுண்டான் கவிமயக்கத்தில் பாடுவது.) இது ஒருவித மயக்கம் அது ஒருவித மயக்கம் இரண்டுக்குமேஒரு கால்தான் மயக்கம் இது மது அது மாது
- இது ஒரு மதியினை மயக்கும் மதுவுணும் போது மனத்தினை மயக்கும் மலர்விழி மாது
- இது ஒரு சொல்ல நினைத்தால் சொல்தடு மாறும் சொக்கிய விழிகளில் சுகமிக ஏறும் மெல்லிய ஆடையும் மெய்தனிற் சேரும் மேலுல கிங்கே வந்தெதிர் சேரும்
- இதுஒரு உண்டதும் தலையில் ஏறிடும் போதை ஓ ஓ தரையில் மாறிடும் பாதை; கண்டதும் உணர்வில் மீறிடும் போதை கலந்தபின் அடடா ஊறிடும் காதல்
- இது ஒரு 15.12.1976 |