210 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
இயற்கையின் அழகுகள் சிரிக்கும்-அவற்றுள் இணைந்தவன் நரம்புகள் துடிக்கும் மயக்குறும் உணர்வுகள் நடிக்கும்-கவிஞன் வாயித ழோகவி உதிர்க்கும் எளியவர் விழிபுனல் சிந்தும்-காணின் இனந்தெரி யாதுக லங்கும் நெளிகடல் போலுளம் பொங்கும்-துயரை நீக்கிடப் பாடல்வ ழங்கும் கொடுமைகள் கண்டுளம் வாடும்-உணர்வு கூடிட வாய்கவி பாடும் படுமிடர் நீங்கிட ஆடும்-ஆனால் பாவலன் துயர்தான் நீடும் தோயுறும் துயரிடை வாழும்-அந்தத் தூயவன் சுழலுவன் நாளும் ஆயினும் கற்பனை சூழும்-அவன்கவி ஆயிரம் ஆண்டுகள் வாழும் 16.12.1976 |