பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)211

62
குறிக்கோளை நோக்கி

நடந்து செல்கிறேன் நடந்து செல்கிறேன்
நலிந்து போயுடல் மெலிந்து தேயினும்

- நடந்து

கடந்த பாதையில் நிகழ்ந்த வேதனை
கலங்க வைப்பினும் மயங்க வில்லைநான்

- நடந்து

அடர்ந்த காடுகள் படர்ந்த மேடுகள்
அலைகள் மோதிடும் ஆழ்ந்த ஆறுகள்
கொடுங்கண் பார்வையின் விலங்கு மேவினும்
கொண்ட என்குறிக் கோளை நோக்கியே

- நடந்து

இருண்ட கண்ணுடன் இரண்டு கால்களும்
சுருண்டு வீழினும் தொடர்ந்து செல்கிறேன்
மருண்டு சோர்கிலேன் வெருண்டு தாழ்கிலேன்
உருண்டு சென்றுமே உயர்வைக் காணுவேன்

- நடந்து

2.1.1977