பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)213

64
கவிதை எழுதிய காகிதம்

கவிதை எழுதிய காகிதம் ஆனேன்-அவர்
கவிதையைச் சுவைத்ததும் காகிதம் ஆனேன்

- கவிதை

புவியோர் போற்றும் புலமையில் உயர்ந்தார்
போனவர் இன்னும் ஏன்வர அயர்ந்தார்

- கவிதை

கையில் எடுப்பார் கண்வழி படிப்பார்
காணும் மகிழ்வால் நெஞ்சது துடிப்பார்
செய்ய இதழ்கள் சிறிதுடன் மடிப்பார்
செந்தமிழ்ப் பாட்டின் செழுந்தேன் குடிப்பார்

- கவிதை

ஒவ்வொரு சொல்லிலும் உளத்தினைக் கொடுப்பார்
ஒளிவிடும் அணியின் உயர்வினை வியப்பார்
செவ்விய அடிதொடை சீர்எழில் தொடுப்பார்
செந்தமிழ்ப் பாட்டின் செழுந்தேன் குடிப்பார்

- கவிதை

3.8.1978