214 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
65 தப்புத் தாளம் (மனிதன், வாழ்க்கையைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டு பாடியது.) மனிதன் பெற்றான் ஒரு பாட்டு-பாடி மகிழ்ந்தான் மனம்போல் தாளமும் போட்டு
- மனிதன் இனிதென அவனவன் இசைகளும் அமைத்தான் இதுதான் இசையென விளக்கமும் கொடுத்தான்
- மனிதன் இசையுடன் பாடலை அவன்வாய் இசைக்கும் இன்னொரு பண்ணிசை அதனுடன் கலக்கும் வசையெனச் சொன்னால் அவனதை மறுக்கும் வளரும் உலகில் புதுமையென் றுரைக்கும்
- மனிதன் தப்புடன் சொற்பொருள் அறியா துரைக்கும் தாளமும் சிலசில சமயங்கள் சருக்கும் எப்படிப் பொறுப்பதென் றுலகமும் வெறுக்கும் எனினும் தடுத்திட முயலா திருக்கும்
- மனிதன் 18.12.1979 |