| பாடுங்குயில் (பாடல்கள்) | 215 |
66 படியாத பிள்ளை சொன்னபடி கேளாத பிள்ளை-பெற்றால் தொடருவது தந்தைக்கு மாறாத தொல்லை முன்னுணர்ந்து பாராமல் அன்று-காதல் மூழ்கித் திளைத்தபயன் காணுகிறான் இன்று படியென்று சொன்னாலுங் குற்றம்-நல்ல பண்போடு நடவென்று சொன்னாலுங் குற்றம் முடிவென்ன தெரியாது நாளை- வாழ்வில் முன்னேற வழியேது படியாத காளை ஊர்சுற்றி ஊர்சுற்றி வந்தால்-வாழ்வில் உண்டாகும் பயனென்ன பெற்றமணம் நொந்தால்? வேர்விட்ட ஆல்வற்றி நின்றால்-தொங்கும் விழுதன்றோ தாங்கிப் பிடித்திடல் நன்றாம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு-கல்வி நாடிப் படிக்காத வாழ்வன்றோ காடு? தோட்டத்தைப் பாழாக்கி நின்றால்-ஊரார் தூற்றிப் பழித்துக்க தைப்பார்கள் கண்டால் குற்றமது செய்கின்ற போது-தந்தை கூறா திருப்பானோ? ஈதென்னதீது? பெற்றவர்கள் கண்டித்து நின்றால்-என்ன பிழைவந்து நேருமவர் சொன்னபடி சென்றால்? |