216 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
தாய்தந்தை காட்டுகின்ற சீற்றம்-பிள்ளை தற்காத்துக் கொள்ளத்தான் வேறென்ன மாற்றம்? நோய்பற்று முன்னேதெ ரிந்து-தாய் ‡நூறிக்க ரைத்துக்கொ டுப்பாள்ம ருந்து ஐந்திலே படியாத பிள்ளை-கூட்டில் அடைத்துக் கிடக்கின்ற பேசாத கிள்ளை நைந்திருளில் மூழ்குமே வாழ்வு-விடியல் நாளைக்குத் தோன்றுமோ? ஏனிந்தத் தாழ்வு? பயிர்செய்யுங் காலத்தில் நட்டால்-நல்ல பலன்கிட்டும்; என்னாகும் பருவத்தை விட்டால்? அயராதிப் போதேமு யன்றால்-நன்மை ஆடிப்பெருக் கெனவே ஓடிவரும் அன்றோ? 31.12.1978
‡நூறி - அரைத்து |