218 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
மூண்டிடும் அவ்வெறி மூளையி லேவந்து மொய்ம்புறச் சுற்றிவ ளைத்திடுமே முத்தமிழ்ப் பாடல்கள் மோதி மனத்தினில் முந்துற வந்துவி ளைத்திடுமே ஈண்டிய மாதரில் ஏந்தெழில் கொண்டவள் என்னுடல் மெல்லென நீவிடுவாள் இன்புறும் பூம்பொழில் தங்கிடும் மாங்குயில் என்னவே பாவினில் கூவிடுவேன் பாட்டைமு டித்துடன் ஏட்டினை மூடலும் பாழுல கில்விழி பட்டதடா! பாடிய யாழிசை ஆடிய மாமயில் பாவையர் ஆடலும் கெட்டதடா! வீட்டைவ ளைத்திடும் வேதனை சூழ்ந்தெனை வெந்துளம் வாடிடச் சுட்டதடா! வெட்டவெ ளிக்கடல் வீழ்ந்துகி டந்துயிர்! வெம்பிட வேவிழி சொட்டுதடா! 8.1.1979 |