பக்கம் எண் :

220கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

அன்ன நடையினர் தாம்-செல்லும்
    ஆவண வீதிகளில்
என்னென்ன வேடிக்கைகள்-செய்வீர்
    ஏளனக் கூக்குரலால்

மங்கையர் வீதிகளில்-நடந்து
    வந்திட அஞ்சுகின்றார்
உங்க ளுடன்பிறந்த-பெண்ணும்
    உண்டென எண்ணிடுவீர்!

கற்பவர் செய்கையிதோ - நாட்டைக்
    காப்பவர் நீவிரன்றோ?
நெற்பயிர் காண்வயலில்-களைகள்
    நீக்கிட முன்வருவீர்!

8.2.1979