222 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
சோம்பலை ஏய்த்தலை நீக்கிடுவோம்-கெட்ட சூழ்ச்சிகள் வஞ்சனை போக்கிடுவோம் கூம்பிய தோள்களை ஏற்றிடுவோம்-நாளும் கூடும் உழைப்பினை யாக்கிடுவோம் வாய்ப்பறை சாற்றலைத் தைத்திடுவோம்-நெஞ்சில் வாய்மையை நேர்மையை வைத்திடுவோம் ஏய்ப்பதை நாமினி நைத் தெறிவோம்-பொய்யை ஏறி மிதித்ததைப் பிய்த்தெறிவோம் வேதங்கள் பூதங்கள் என்றுரைத்தால்-அந்த வீணரின் கொள்கையைக் கொன் றழிப்போம் வாதங்கள் மேடையில் நின்றுரைப்போம்-சொன்ன வாய்மைகள் யாவையும் நன்றமைப்போம். 20.2.1979 |