| பாடுங்குயில் (பாடல்கள்) | 223 |
70 எனது உலகம் எனக்கென உண்டொரு வுலகம்-அங்கே இன்பங்கள் வந்தெனைத் தழுவும் மனத்தினில் தானது குலவும்-வந்த வாட்டங்கள் விட்டெனை விலகும் பலப்பல புதுமைகள் நிகழும்-நல்ல பாடல்கள் பற்பல திகழும் சொலச்சொல மனமது மகிழும்- அந்தச் சுவையினில் நாவது புகழும் மிதப்பது போலொரு கனவு-காதல் மெல்லிய மாதரின் உறவு புதுப்புது நினைவுகள் வரவு-நெஞ்சப் பூவினில் சுவைமிகு நறவு. இனித்திடும் அவ்வுல கதனில்-என்னை எதிர்த்திட ஒருபகை யிலேயே கனிச்சுவை யனையஎன் மொழியைக்-கேட்டுக் கருத்துடன் தொடர்வரென் வழியை நிமிர்த்திய தோளோடு வருவேன்-அங்கு நின்றிடு வார்க்குரை தருவேன் அமைச்சர்கள் வாழ்த்திட மகிழ்வேன்-என்றன் அரியணை மீதினில் அமர்வேன் |