பக்கம் எண் :

224கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

கொடுமைகள் பொடிபடச் சிதறும்-என்வாய்
    கோளரி யோவென அதிரும்
மிடிமைகள் இலையென உதிரும்-வஞ்சம்
    மேவிய சூழ்ச்சிகள் கதறும்

மடம்படு சாதிகள் தொலையும்-அங்கு
    மதமெனும் போர்வைகள் கலையும்
கடவுளின் கதைகளும் விலகும்-செம்மைக்
    கதிரவன் ஒளிதரப் பொலியும்

இலக்கண நெறியொடு திகழும் இன்ப
    இலக்கிய வாழ்வினில் மகிழும்
நிலத்தினில் உயர்வெனப் புகழும்-நல்ல
    நீதிகள் தழுவுமென் னுலகம்.

25.2.1979