பக்கம் எண் :

226கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

வாடும் போது வாழ்வுக்காக
வால்பி டிக்க நாணினேன்
பீடு மானம் வேண்டி யின்னல்
பெற்ற பின்பும் பேணினேன்
    எத்தர் வாழும் ஏற்றங் காட்டி
    என்னை உலகம் சிரித்தது

அண்டை மாந்தர் என்னை யண்டி
ஆசை வார்த்தை பேசினர்
கொண்ட கொள்கை நின்று வாழக்
கோல வாழ்வை வீசினேன்
    பிள்ளைத் தன்மை என்று பேசிப்
    பேதை யுலகம் சிரித்தது

இட்ட கோடு வட்டமாக
எல்லைக் குள்உலாவினேன்
*தட்டு நேரில் முட்டும் போதும்
தாண்ட வில்லை கால்களே
    ஒட்டி வாழக் கற்றி லேனென்
    றுலகம் என்னைச் சிரித்தது.

23.6.1979


* தட்டு - தட்டுப்பாடு