| பாடுங்குயில் (பாடல்கள்) | 227 |
72 திறந்தன கதவுகள் (பணியிலிருந்து விடுபட்டபொழுது பாடியது.) கூண்டின் கதவுகள் திறந்தன-என் கோலச் சிறகுகள் விரிந்தன யாண்டும் நினைவுகள் பரந்தன-என் ஆசைக் கனவுகள் உயர்ந்தன பூட்டும் விலங்குகள் ஒடிந்தன-ஏவல் பூணுஞ் சடங்குகள் முடிந்தன வாட்டும் *வழக்குகள் பொடிந்தன-துன்ப வாழ்வின் இரவுகள் விடிந்தன பூண்ட இளமையும் கழிந்தது -பாதி பூக்கும் புதுமையில் கழிந்தது ஆண்டோ அறுபது தொடர்ந்தது-பாதி ஆசான் பணியில் நடந்தது தேக்கும் ஒருதடை இனியிலை-என்பால் தீமை வரஒரு வழியிலை பூக்கும் கவிமலர் அளவிலை-நெஞ்சம் பொங்கும் மகிழ்வினிற் கடலலை தோள்கள் மலையென நிமிர்ந்தன-நெஞ்சில் தூய்மைத் துணிவுகள் வளர்ந்தன நாள்கள் மகிழ்வுறப் பிறந்தன-எண்ணம் நாட்டின் பணியிடை விரிந்தன *வழக்குகள் - இந்தியெதிர்ப்பு வழக்கு, மற்றுமொரு பொய் வழக்கு. |