நித்தம் உனைத் தொழுதே - எங்கும் நின்புகழ் பா டுமெனைப் பித்தன் வெறி யனென்றே - உலகம் பேசுதல் காண் கிலையோ? முத்தமிழ் தந் தபித்தால் - செல்வம் முன்னின்று தே டுகிலேன் இத்தரை மீ தினிலே - வறுமை எத்தனை துன் பமம்மா! கொல்லும் வறு மையிலும் - செம்மை குன்றா திலங் கிடவே வெல்லும் மன நிலையைத் - தாயே வேண்டுகி றேன் அருள்வாய் சொல்லுமென் பா டலினால் - உலகம் சூழ்ந்து வணங் கிடவே வல்லமை வேண் டுமம்மா - என்றும்நான் வாழ்ந்திட வேண் டுமம்மா. |