24 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
14 தமிழ் - என் தாய் - செந்தமிழ் என் பவளாம் - நல்ல செல்வக் குடி மகளாம் முந்தை மொழிகளிலே - அவளும் மூத்தவ ளாய்ப் பிறந்தாள் முந்திய மூ வரசர் - அவையில் மொய்ம்புறத் தான் வளர்ந்தாள் வந்தவர் யா வருக்கும் - செல்வம் வாரி வழங் கிடுவாள் தென்ற லுடன் பிறந்தாள் - நல்ல செய்கையொன் றே யறிவாள் என்று பிறந் தவளோ? - இவள் எத்தனை ஆண் டினளோ? இன்றும் இள மையுடன் - அன்னை ஏற்றம் உறப் பொலிவாள் ஒன்றிய நான்கு பெண்கள் - பெற்ற ஒண்டொடி யா மவளே கன்னடத் தான் துளுவன் - மலையன் கண்டு மொழித் தெலுங்கன் என்னுமிந் நால் வருக்கும் - அவரை ஈந்து மணம் முடித்தாள் பெண்ணெடுத் தே மகிழ்ந்தோர் - என்னைப் பெற்றவ ளைப் பகைத்தார் நன்னடைப் போக் கிழந்தார் - அந்த நால்வரும் நன் றிகொன்றார் |