பக்கம் எண் :

230கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

- அதோ

ஏற்றமும் தாழ்ச்சியும் *இரியும்-மக்கள்
யாவரும் ஒன்றெனத் தெரியும்
மாற்றமெ லாமொரு புதுமை-செல்வம்
மாந்தர்கள் யாவர்க்கும் பொதுமை

- அதோ

கோபுர வாயில்கள் தெரியும்-அவை
கோவில்க ளாமெனல் மறையும்
ஆபயன் யாவையும் விளையும்-அவை
யாவரும் போய்வரும் நிலையம்

- அதோ

பேதைமை முற்றிலும் அழியும்-அங்குப்
பெண்ணின வாழ்வுகள் தழையும்
ஓதுநல் ஞானமும் ஒளிரும்-அவர்
ஓர்நிக ராமெனல் மிளிரும்

- அதோ

பண்புகள் யாவையும் மலரும்-அமைதி
பாங்குற எங்கணும் படரும்
கண்கொளும் காட்சிகள் வளரும்-மனம்
காவிரி யாமென மகிழும்.

- அதோ

24.6.1979


* இரியும் - ஓடும்