| பாடுங்குயில் (பாடல்கள்) | 231 |
74 அருகில் அவளிருந்தால்... அவளும் தமிழும் அருகிலிருந்தால் ஆயிரம் ஆயிரம் பாடல் வரும்
- அவளும் குவளை மலரில் குளிர்விழி பெறுவாள் குவியிதழ் முல்லையில் குறுநகை புரிவாள்
- அவளும் தண்பனி மலைமேல் தவழும் முகிலால் தனதுடல் எழிலை மூடிடும் *துகிலாள் வீண்படும் மலையில் வீழ்ந்திடும் அருவி விரலிசை மீட்டும் யாழெனுங் கருவி
- அவளும் காலையில் கீழ்த்திசைக் கடல்மிசை எழுமோர் கதிர்தான் என்மனக் *கன்னியின் முகமாம் மாலையில் மேற்றிசை மினுக்கிடும் வானே மனங்கவர் எழில்கொளும் மங்கையின் மேனி
- அவளும் தண்பனி நிலவில் தனிநடம் புரிவாள் தளிரில் மலரில் பனியென உறைவாள் கண்துயில் மருவும் பசும்புல் தரையாள் களிகொள் மயில்போல் ஆறெனத் திரிவாள் - அவளும்
* துகிலாள் - ஆடையையுடைவள் * கன்னி என்றது இயற்கையை. |