பக்கம் எண் :

காவியப் பாவை31

17
தமிழ் - என் மனைவி
-

வெள்ளி நிலா வினிலே - ஒரு
    வெட்ட வெளி தனிலே
அள்ளி அணைத் தசுகம் - அதனால்
    ஆவி சிலிர்த் ததடி

சிந்தா மணி தவழும் - மார்பில்
சேர்ந்து திளைத் தசுகம்
    எந்த விதம் உரைப்பேன் - எழுதி
ஏட்டினில் காட் டுவதோ?

நற்றிணை ஐங் குறுநூ - றகமும்
    நல்ல குறுந் தொகையும்
உற்ற கலித் தொகையும் - தமிழே
    ஊட்டி மகிழ வைத்தாய்

மேவித் தழு வுவதற்கே - உன்மணி
    மேகலை பற் றுகையில்
நீவிட் டகன் றுவிடின் - பிரிவு
    நெஞ்சைத் துளைக் குமடி

வந்த வடக்குத் தெரு - மகள்பால்
    வாஞ்சைஎன் றெண் ணினையோ
அந்தப் பொது மகளைத் - தொடவும்
    ஆசையொன் றில் லையடி

வாழ்வு வளம் இழந்தாள் - வடக்கில்
    வாடகை வீடு டையாள்
சூழ்வினை ஒன் றுடையாள் - வலையில்
    சொக்கிவிட் டேன் எனவோ