36 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
20 மறவர் நாடு - எடுப்பு பகைவென்று புகழ்கொண்ட பழநாடு நிதம் வாழ்கவே-பகை முடிப்பு வாளோடு வாள்மோதும் போரென்ற மொழிகேட்டு மகிழ்வோடு தோள்வீங்கும் மாவீரர் வளர்நாடு தோளோடு வாள்வீழ்ந்து பகைமாயப் போராடும் துணிவாளர் பகைபணியிற் கனிவாளர் நிறைநாடு விழுப்புண்ணை மேலாக விழைகின்ற ஒருநாடு வேல்வரினும் இமையாத வீரமிகு தமிழ்நாடு புழுக்கூட்டம் எனப்பகையை அழித்தொழித்துப் பெயர்கின்ற புதல்வனுக்குப் பாலூட்டி வளர்த்ததிருத் தாய்நாடு தூங்குகிற வேங்கையினை இடருகிற குருடனெனத் தொலைவார்கள் எமைஇகழ்வோர் என்றெதிரும் மறநாடு பூங்குழலி பிறநாட்டுப் பகையறுக்க ஒருமகனைப் போருக்குப் போவென்று வேலீயும் தாய்நாடு |