பக்கம் எண் :

38கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

22
தமிழர் வாழ்வு!

-
எடுப்பு

வாழ்வினைப் பாராய் நீ - தமிழர்
வாழ்வினைப் பாராய் நீ

-வாழ்வினை

தொடுப்பு

தாழ்வினை ஏற்றார் தமிழினைப் போற்றார்
தம்மவர் ஆட்சியை அழித்திடும் கூற்றார்

-வாழ்வினை

முடிப்பு

அலைகடல் கடந்து பலபல நாடு
அனைத்துமே சென்று பட்டனர் பாடு
கலைபல கண்டோர் நிலையினைக் கண்டு
கலங்குதென் உள்ளம் கவலையே கொண்டு

-வாழ்வினை