23 தமிழன் ஏக்கம் - தமிழன் என்றதுமே-மிகப்பரி தாபம் பிறக்குதம்மா! இமயம் வென்றானே-அவன் இன்று ஏற்றங் குறைந்தானே! சமையம் போகாதோ? - தொல்லைதரும் சாதி தொலையாதோ? சமத்துவ வாழ்வு-மீண்டும் தளிர்த்துச் செழிக்காதோ? உழுபவன் ஒருவன்-உடைதர உழைப்பவன் ஒருவன் பழமையின் பேரால்-பயன்பெறப் பார்ப்பவன் வேற்றவனோ? அழுதிடும் பாலன்-பசியால் ஆவி தொலைந்தாலும் கழுவுவர் பாலால்-அந்தோ கல்லுருத் தேவுகளை ஓட்டைக் குடிசையுள்ளே-உணவின்றி ஒட்டி உலர்ந்த மகன் வேட்டியும் இல்லாமல்-அவனுறும் வேதனை தீராதோ? மாட்டினும் கீழாக-மனிதன் மாண்டிடும் தீய நிலை ஓட்டிட வேண்டுமம்மா-உண்மையை ஓர்ந்திட வேண்டுமம்மா |