பக்கம் எண் :

காவியப் பாவை47

30
நாணம் ஏனோ?

-
எடுப்பு

கதவில் உடல்மறைத்துக் காட்டுகிறாள் முகத்தை-எனைக்
கண்டவுடன் நாணம் கொண்டமையினாலோ?

-கதவில்

தொடுப்பு

விதவிதமாம் மலர்சூடி மேலாடை சூடாமல்
விளையாடித் திரிந்தாளே அதை எல்லாம் மறந்தாளோ?

-கதவில்

விளையாடும் ஒருநாளில் வீண்வம்பு நான்செய்தேன்
வெம்பிஅழு தெனைவைதாள் நான் வளையை நொறுக்கியபின்
தலைநோகக் கொட்டியதை நினையாமல் மறுநாளும்
தானாக விளையாட வந்துதையும் மறந்தாளோ?

-கதவில்

குடங்கொண்டு நீரோடு வருங்காலை இப்போது
குனிந்ததலை நிமிராமல் நடந்துபிறர் அறியாமல்
தடங்கண்ணி ஏகிடுவாள் தனியான நிலைகாணின்
தானோக்கி நகைசெய்வாள் மானோக்கி மனம்யாதோ?

-கதவில்