பக்கம் எண் :

48கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

31
முத்தம் தந்தான்

-
எடுப்பு

வந்தோடி முத்தம் தந்தானடி - தோழி
அந்தமிகுந்த என்றன் சிந்தை மகிழ்ந்தவீரன்

-வந்தோடி

தொடுப்பு

பந்தாடி மீள்கையிலே பகலோனும் வீழ்கையிலே
செந்தாமரை முகத்தில் செவ்வாய் இதழ்புதைய

-வந்தோடி

முடிப்பு

சோலையிலே பலநாள் மாலையிலே வருவான்
சொன்னதில்லை ஒருசொல் சுந்தரக் குரிசில்
மேலையிலே மணந்தான் போலவே நினைந்தான்
மெல்லவே சிரித்தான் உள்ளமே பிணித்தான்

-வந்தோடி