50 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
33 எந்தவிதம் மறந்தார்? - எடுப்பு எந்தவிதம் மறந்தாரோ - என்னை நொந்து மெலிந்திடவே பிரிந்தாரே -எந்த தொடுப்பு வந்திடுவேன் மழைக் காலத்திலே என்றார் வாராமலே இன்னும் வாட்டியே கொன்றார் -எந்த முடிப்பு வாட்டமுகங் கண்டால் நெஞ்சம் நெகிழ்ந்திடக்கெஞ்சுவார் வம்புகள் செய்துபின் வாரியணைத்தெனைக் கொஞ்சுவார் சேட்டைமொழிபேசி முத்தங் கொடுத்தெனைக் கூடுவார் செப்பமான தமிழ்ப்பாடல் மகிழ்ந்திடப் பாடுவார் -எந்த |