பக்கம் எண் :

காவியப் பாவை51

34
ஏனிந்த வம்பு?

-
எடுப்பு

என்ன குற்றம் செய்தேன்? - நிலவே!
ஏனிந்த வம்பு? இனியிலை தெம்பு!

- என்ன

தொடுப்பு

அன்னவர் இல்லைஎன்ற ஆணவமோ? காதல்
மன்னவர் இங்குவரின் காணுவையோ?

- என்ன

முடிப்பு

நள்ளிராப் போதில் நஞ்சினை உமிழ்ந்தாய்
நலிவே தந்தாய் மெலிவால் நொந்தேன்
பள்ளியில் புழுவெனப் பதைத்திடச் செய்தாய்
பாழ்மதி யேஎனை வீழ்ந்திடச் செய்தாய்!

-என்ன

மேகத்தில் நுழைந்தாய் மீண்டுமேன் எழுந்தாய்?
மென்றுதின் னாமலே மேகமேன் உமிழ்ந்ததோ?
சாகத்தான் செய்வையோ? தீயைத்தான் பெய்வையோ
சஞ்சலப் படுகிறேன் பஞ்செனக் கெடுகிறேன்

-என்ன