36 ஆவி கலந்த அழகி - எடுப்பு அவளோர் அழகி - என் ஆவி கலந்தனள் பலநாள் பழகி -அவள் தொடுப்பு குவளை அவள்கண் குளிர்தேன் பார்வை குடிக்கத் தவிக்கும் விழிக்குள் நிறைந்திடும் -அவள் முடிப்பு குழலோ குரல்வாய் இசையால் பணியும் குயிலோ பயில மெதுவா அணையும் முழுவான் நிலவோ முகமோ தெரியேன் முகிலோ குழலோ எனுமா றறியேன் -அவள் பிழியா நறவோ குறையா மதியோ பிணையோ யாழில் பிறவா இசையோ எழுதாக் கிழியோ பொளியாச் சிலையோ எதுதான் இணையோ நிகர்தான் இலையோ -அவள் |