செவிலி :
சூதறி யாதவள் வாதறி யாதவள்சொக்கி நடந்தனள் மங்கையே - இதில்யாது நடந்தது தங்கையே - முகம்ஏக்கம் படர்ந்ததேன் நங்கையே
தோழி :
காதல் மலர்ந்தது நாணம் பிறந்ததுகண்டு தெளிந்தனள் யாவுமே - துயர்மாது முகந்தனில் மேவுமே - அவன்மாலை அணிந்தபின் போகுமே