பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

38
ஆடினாள்

-
எடுப்பு

ஆடினாள் நடம் ஆடினாள்
அங்கும் இங்கும் எங்கும் ஓடி

- ஆடினாள்

முடிப்பு

சடையோடு மலராடச்
    சதிராடும் அவளோடு
நடைபோட முடியாமல்
    மடவன்னந் தடுமாற

- ஆடினாள்

முழவாளர் விரலாட
    முன்கையில் வளையாட
இழைபோல்என் உயிராட
    மழைகாணும் மயில்போல

- ஆடினாள்

அடதாளம் பிழையாமல்
அழகாகக் காலாட
உடனாடு கிண்கிணியும்
மேகலையும் ஊடாட

- ஆடினாள்