பக்கம் எண் :

58கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

39
ஆட வாராய்!

-
எடுப்பு

ஆடவாராய் என்னோ டாடவாராய்
ஆடுமெழில் மாதரசே! - ஆடவாராய்

தொடுப்பு

பாடும்முறை நானறிந்து பாடிடுவேன் பெண்மயிலே
பைந்தமிழே! என்னுயிரே! பாடியபின் தாமதமேன்

-ஆடவாராய்

முடிப்பு

கட்டுதுகிற் கச்சின்மிசை முத்துவடம் ஆடக்
கைத்தலங்கள் மொய்த்தவிரல் கற்றமுறை நாடப்
பட்டுடுத்தும் சிற்றிடையில் மேகலைகள் பாடப்
பற்றுகழற் கெச்சையொடு தெக்கணத்துக் கூத்து

-ஆடவாராய்

அஞ்சனமைக் கண்ணிரண்டும் கஞ்சமலர் விஞ்ச
அம்பொனடிச் செஞ்சிலம்பு தஞ்சமெனக் கெஞ்ச
மஞ்சள்ஒளி தங்குமெழில் கொஞ்சுமுக வஞ்சி
வந்தெனது நொந்துழலும் வேதனைதீர் நெஞ்சில்

-ஆடவாராய்

மெல்லியலே உள்ளமதை நல்விழிகள் சொல்ல
மெய்யுருகி என்மனமும் நின்மனமும் புல்லச்
சொல்லுதொறும் தாள்விரல்கள் தாளவழி செல்லத்
துள்ளிவரும் மான்பிணைபோல் சூழ்ந்துவரும் வல்லி!

-ஆடவாராய்