40 விளையும் பயிர் - தலைவன்: கொடிதூவும் மலர்யாவும் அணை யாகுமோ - தென்றல் குளிர்பூசி மணம்வீசித் துணை யாகுமோ - நமக்குப் புணை யாகுமோ தலைவி: மயிலாடக் குயில்பாடும் வனம் யாவுமே - காதல் மகிழ்வோடு விளையாடும் இட மாகுமே - நமக்குப் பட காகுமே தலைவன்: நிலமீதில் உயர்வானின் நலஞ் சேருமோ - காதற் கலையாவும் நிலையாகி நன வாகுமோ - அன்றிக் கன வாகுமோ |