41 கூடித் திரிவோம் - நெற்றிப் பிறை தனிலே - புரளும் நீள்சுருள் கூந்தலடி முற்றத் துறந் தவரைக் - காதல் மோகத்தில் ஆழ்த்துமடி பேச்சுக் குறும் பதனால் - என்னைப் பேதுறச் செய்துவிட்டாய் வீச்சு விழி களினால் - எனக்கு வேதனை தந்து விட்டாய் கச்சுக் குடங் களினால் - எனக்குக் கள்வெறி மூண்டதடி நச்சுப் படம் விரித்தாய் - நெஞ்சம் நைந்திட நீசிரித்தாய் சின்னக் குறு நகைதான் - உன்றன் செவ்விதழ் ஓரத்திலே மின்னப் பொழிந் திடுவாய் - என்னுயிர் மீண்டும் தளிர்த்திடவே வெண்கலத் தண் குரலோ - உனக்கு வீணை நரம்பொலியோ பண்கலந் தே இசைத்தால் - இன்பப் பாற்கடல் மூழ்கிடுவேன் பாடிக் களித் திடுவோம் - இன்பப் பாலிற் குளித்திடுவோம் கூடித் திரிந் திடுவோம் - வானக் கோல வெளிதனிலே |