பக்கம் எண் :

62கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

42
வீணை மீட்டுவோம்
-

தலைவன் :

வானத்திலே கோட்டைகட்டித்,
    தோட்டம் படைத்தேன் - அங்கே
வாசமலர் பூத்திருக்க
    வாழ்வு கொடுத்தேன்

தேன்குடிக்கும் நாளைஎண்ணிச்
    சிந்தை மகிழ்ந்தேன் - அந்தத்
தெய்வமலர் வாடியதால்
    தேய்ந்து சிதைந்தேன்

தலைவி:

காய்ந்தமலர் வீழ்ந்துவிட்டால்
    காலம் மாறுமே - அந்தக்
காலத்திலே வேறுமலர்
    பூத்துக் காணுமே

பூத்தமலர் வாழ்வுதனில்
    புதுமை காட்டுமே - அந்தப்
புதுமைஎலாம் நாளுமின்பப்
    போதை யூட்டுமே