பக்கம் எண் :

காவியப் பாவை63

தலைவன்:

வாடுமென்றன் வாழ்விலின்பம்
    வந்து கூடுமோ? - காதல்
வாஞ்சையினால் மீண்டும்மன
    வண்டு பாடுமோ?

தலைவி :

நாடிவரும் வீணையிலே
    நாதம் இல்லையா? - அந்த
நாதந்தரும் பாடலிலே
    நாட்ட மில்லையா?

இருவரும்:

வீணையினை நாமெடுத்தே
    மீட்டி வருவோம் - காதல்
விந்தைஎலாம் கண்டுலகில்
    மேன்மை பெறுவோம்


காதலில் தோல்வி கண்ட ஒருவனும் அவன்பாற் காதல் கொண்ட மற்றொருத்தியும் பாடுவது.