72 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
48 பிள்ளைக் குறும்பு - எடுப்பு சொன்னாலும் புரியாத பருவம் - என்றன் துயரத்தைச் சற்றேனும் உணராத சிறுவன் -சொன்னாலும் முடிப்பு காலைச் சுடர்தோன்றும் முன்னே - தூக்கம் கலையாமல் கண்விழித் தழுவானென் கண்ணே பாலைக் கொடுத்தான பின்னே - அந்தப் பாலன் குறும்புக்கோர் அளவுண்டோ பெண்ணே -சொன்னாலும் வாயிலில் மாக்கோலம் போட்டுப் - பின்னர் வந்தங்கு நோக்குவேன் அவன்கூச்சல் கேட்டுக் கோயிலில் பிள்ளையார் போலே - அந்தக் கோலப் பொடிக்குள்ளே மூழ்கித் தவிப்பான் -சொன்னாலும் சோறாக்க விடுவானோ பிள்ளை - அப்பப்ப சொல்லமுடி யாதபடி தருவானே தொல்லை கூறாக்கி வைப்பானே யாவும் - சமையற் கூடமவன் பயில்கின்ற போர்க்கூட மாகும் -சொன்னாலும் |