தண்ணீர்க் குடங்களையும் பார்ப்பான் - மூடும் தட்டங்கள் விட்டெறிந்து தாளங்கள் சேர்ப்பான் கண்ணீரைக் கொட்டி அவன் தீர்ப்பான் - தட்டுக் காலிலே பட்டுத் தெறித்தவுடன் ஆர்ப்பான் -சொன்னாலும் தாலாட்டித் தொட்டிலிலே போட்டால் - மெல்லத் தலைதூக்கிச் சிரிப்பானே என்பாட்டைக் கேட்டால் வாலாட்டித் திரிகின்ற சேட்டை - சொன்னாலும் வயிறெரியுங் கேளடிநான் படுகின்ற பாட்டை -சொன்னாலும் என்றேனும் நூலொன் றெடுப்பேன் - கண்டால் என்னைப் பிடித்துத் துவைத்துக் கடிப்பான் அன்றேஅந் நூலுக்கும் ஆயுள் - தீரும் ஆனாலும் என்னைத்தான் அவர்நெஞ்சங் காயும் -சொன்னாலும் கதவைத் திறந்தாலே போதும் - கண்டு கடிதோடி முன்வாயில் தெருவிலே வீழும் பதறி நான் ஓடிவரும் முன்னே - அந்தப் பவழச்செவ் வாய்நிறையும் பெருவாரி மண்ணே -சொன்னாலும் பஞ்சணையில் துயில்கொள்ளும் போது - சின்ன பாலகனின் பால்வழியும் கண்ணிமையின் மீது கொஞ்சிவிளை யாடுமெழில் காண்பேன் - செய்த குறும்பெல்லாங் காணாத தாயுள்ளம் பூண்டேன் -சொன்னாலும் |