பக்கம் எண் :

74கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

49
நிலையாய் இரு

-
எடுப்பு

கொள்கையில் நிலையாயிரு மனிதா - கொண்ட
கொள்கையில் நிலையாயிரு மனிதா - எந்தக்
கொடுமைகள் வந்தாலும் கலையாதிரு மனிதா

-கொள்கை

தொடுப்பு

கொள்ளைநிதி பலவாக உனைநாடிக் குவிந்தாலும்
கொடுவறுமை மிகவாகித் துயராலே அவிந்தாலும்

-கொள்கை

முடிப்பு

சரியா இது தவறா என அறிவால்மிக நினைவாய்
தகுமேஇது எனஓர்நெறி விழைவாய் அதில் புகுவாய்
உரமேபெறு பயமேதொலை இறவாதவர் இலையே
ஒருசாண்வயி றுணவேபெற நிலைமாறுதல் புலையே

-கொள்கை