பக்கம் எண் :

76கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

கையினிற் சீழிருந்தால் - நல்ல
    கத்தியி னாலறுப்பான்
மெய்யினில் புண்படுமே - என்றால்
    மேனி நலம்பெறுமோ?

சாதிச் சழக்குகளும்-பொய்மைச்
    சாத்திரக் குப்பைகளும்
மோதிப் பகைக்குணத்தால் - சண்டை
    மூண்டு மலிந்ததுவே

மூட மதிச்செயலால் - மாந்தர்
    மொய்ம்பு சிதைந்தனரே!
நாடு நலிந்ததுவே - மன்பதை
    நாற்றம் மிகுந்ததுவே!

இச்சமு தாயமதை - மாற்றி
    ஏற்றங் கொடுப்பதென்றால்
எச்செயல் ஏற்றதுவோ - நன்றே
    எண்ணித் துணிந்திடுவீர்!

உற்ற புரட்சியினால் - அன்றி
    ஓர்நலம் கூடிடுமோ?
மற்றவர் புண்படுவார் - என்றால்
    மன்பதை சீர்பெறுமோ?