பக்கம் எண் :

காவியப் பாவை77

51
படமும் பாடமும்

-
எடுப்பு

பாடத்தை மறந்துவிட்டான் - தலைவன்
படத்தைமட்டும் எங்கும் திறந்துவைத்தான்

-பாடத்தை

தொடுப்பு

வேடத்தை நல்லதென் றேற்றுக் கொண்டான்
வெற்றொலி எங்கணும் சாற்றிக் கொண்டான்

-பாடத்தை

முடிப்பு

சந்தையில் கூடுதல் போலவே கூடுவான்
சந்தடி யின்றியே போரெனில் ஓடுவான்
மந்தையில் கூடல்போல் மாந்தனும் கூடினால்
மாண்புகள் நாட்டினில் கிட்டுமோ தேடினால்?

-பாடத்தை

கூடையில் பூக்களைப் பார்ப்பது போதுமா?
கொண்டையில் வைத்தெழில் சேர்ப்பது பாவமா?
மேடையில் கொள்கையை வைப்பது போதுமா?
மேவிடும் வாழ்க்கையில் விட்டிடல் ஆகுமா?

-பாடத்தை