78 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
52 பாரதியின் குரல் - வீதிகள் எங்கணும் என்புகழே - பாடி வெற்றி முழக்கிடும் மானிடரே சாதிகள் இன்னும் தொலைத்தீரோ - பொய்மைச் சாத்திரம் ஏதும் விடுத்தீரோ? ஆடியும் பாடியும் கூத்தடிப்பீர் - என்றன் ஆர்வமெ லாம்எங்கோ போட்டழித்தீர் பாடிய என்னுடைப் பாக்களிலே - அந்தோ பற்பல ஊனங்கள் ஆக்கிவிட்டீர்! தன்னலம் ஒன்றையே மேம்படுத்த - என்பால் சாகசக் காதலைக் காட்டுகிறீர் என்னுளம் யாதென எண்ணுகிலீர் - உமக் கேற்பவே என்னைச் சுழற்றுகிறீர்! தெய்வங்கள் பற்பல வேண்டுகிறீர் - பகைத் தீயை வளர்த்திங்கு மாளுகின்றீர் உய்யும் வழிசொன்ன என்மொழியைப் - புதைத் தோங்கிய மண்டபங் கட்டிவிட்டீர்! கோவிலில் மாணவர் கல்விபெறப் - பள்ளிக் கூடங்கள் ஆக்கிட முன்வருவோர் ஆவலைக் கொன்று விழுங்குதற்கே - சட்டம் ஆக்கிட முன்னிருந் தார்ப்பரிப்பீர்! |