96 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
பாடும் இசைக்குருகி நெஞ்சு நெகிழ்ந்து பாதமெடுத் தாடுகையில் வஞ்ச மனத்தார் வேடர் பெருவலையை வீசி வருவார் வீழாமல் கண்விழித்தே ஆடு மயிலே நாட்டைக் கெடுக்கும்நரிக் கூட்டம் நிகர்வார் நச்சுக் குணம்படைத்த நாகம் அனையார் கேட்டுச் செயலனைத்தும் நீக்கி விடவே கெக்கலித்துச் சுற்றிநடம் ஆடு மயிலே |