பக்கம் எண் :

98கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

-காலை

67
மாலை நேரம்

-
எடுப்பு

மாலை நேரந் தோன்றும் வானமே
மனமகிழ் பலவகை நிறமுடன்

-மாலை

தொடுப்பு

சோலையில் பறவைகள் கூட்டில் உறைந்திட
வேலையில் ஆதவன் மெல்லவே மறைந்திட

-மாலை

முடிப்பு

ஓதிய பிள்ளைகள் ஒன்றி விளையாட
வீதியில் ஆவினம் கன்றுள்ளி ஓட
மாதர்கள் நற்றமிழ் இன்னிசை பாடக்
காதலர்ப் பிரிந்த கன்னியர் வாட

-மாலை

உள்ளங் கவர்ந்திடும் உன்எழில் கண்டேன்
கள்ளங் கவடற்ற அமைதியுங் கொண்டேன்
வெள்ளம்போல் உணர்வெழக் கவிதைகள் விண்டேன்
மெள்ள மெள்ள இன்ப உலகினிற் சென்றேன்

-மாலை