பக்கம் எண் :

காவியப் பாவை99

68
மாமியும் மருமகளும்!

-
எடுப்பு

மருமகளைப் படுத்துகிற துன்பம் - சொந்த
மாமிக்குத் தந்துவரும் தனியான இன்பம்

-மருமக

முடிப்பு

சட்டியை ஏன்போட் டுடைத்தாய் - வீட்டைச்
சரியாகக் கூட்டென்று சொன்னேன்மு றைத்தாய்
கொட்டியா இங்கே கிடக்கு? - அப்பன்
கொடுத்தானோ சீரெல்லாம்? வாயைய டக்கு

கொண்டவனை வசமாக்கிக் கொண்டாய்! - நீதான்
குடும்பம் நடத்துகிற பாங்கையே கண்டால்
அண்டையிலே சிரிப்பார்கள் உன்னை - இவளை
அடக்காமல் விட்டாயே என்பார்கள் என்னை

நீவந்து கால் வைத்த நாளாச் - செல்வம்
நீறாகிப் போச்சுதே வாழ்வெல்லாம் பாழாய்!
நோய்வந்து வீழ்ந்தான் உன் ஆளன் - உன்னை
நொடிப்போதில் உயிர்கொண்டு போகானோ காலன்!

கொன்றாலும் ஆறாது நெஞ்சம் - என்னைக்
கொஞ்சமும் மதிக்காமல் திரிகின்றாய் பஞ்சை
என்றென்று பலவாறு பேசி - முகத்தில்
இடிப்பாள் அடிப்பாள் மறைப்பாளே பூசி