பக்கம் எண் :

10கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

காட்டுக வீரம்!

வேலெடுத்துப் போர்தொடுத்த வீரம் எங்கே?
    வெங்குருதி வாளெங்கே? தோள்கள் எங்கே?
கோலெடுத்த பேரெல்லாம் ஆள வந்தார்
    கொட்டாவி விட்டபடி தூங்கு கின்றாய்!
மாலுடுத்த தமிழ்மகனே! மானம் எங்கே?
    மயங்காதே விழி! எழு! பார்! உலகை நோக்கு!
கால்பிடித்து வாழ்வதுவோ தமிழ வாழ்வு?
    கானத்துப் புலிப்போத்தே வீரங் காட்டு!(21)

தலைப்பு:தமிழ் வாழ்வு
இடம்:எழுத்தாளர் மன்றம் - மதுரை
நாள்:28-9-1958