100 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
செங்கரும்புச் சாறெல்லாம் சேர்ந்தோடிப் பக்கத்துப் பொங்கிவரும் வாழைமரப் பாத்தி புகுவதனால் காய்க்குங் குலையில் கரும்பினிமை தானேறும்; வாய்க்குங் கமுகினங்கள் வானுயர்ந்த தென்னைஎன எண்ணும் படிவளரும்; எவ்விடத்துஞ் சோலைவளம், உண்ணும் பழமரங்கள் ஊரெல்லாம் தோன்றுதலால் காணும் இடமெல்லாம் கண்குளிரும் காட்சியதாய்த் தோணும் மருதவளம் சூழ்ந்திருக்கும் இந்நாடு; நெய்தல் வளம் முப்பாலும் ஆழியுண்டு மூழ்கியதன் உட்சென்றால் தப்பாமல் முத்துண்டு சார்ந்த பவழமுண் டாறு சுவையுள் அரிய சுவையாகக் கூறுமுயர் உப்புக் கொழிக்கும் அளமுண்டு; நாடெல்லாம் சுற்றி நலங்கொழிக்கும் வாணிகத்தால் ஏடெல்லாம் ஏத்த எழிற்கலங்கள் ஓட்டுதற் கேற்ற துறைமுகங்கள் எத்துணையோ ஈங்குண்டு; போற்றும் படியாய்ப் புவியிற் பெரும்பரப்பாய் ஓதுங் கடற்கரைகள் ஒன்றிரண்டாம் அன்னவற்றுள் ஈதும் ஒருகரையென் றெண்ணத் தலைநகரில் சேருங்கரையுண்டு செந்தமிழர் நாகரிகம் கூறுந் துறைமுகங்கள் கூடிக் கிடப்பதுண்டு; நெய்தல் வளத்தால் நெடுநாளாச் செல்வமழை பெய்யும் பெருநாடு பேணும் திருநாடு; கனிப்பொருள் வளம் தென்னாடு பொன்னாடாய்ச் செல்வ வளங்கொழிக்க இந்நாடு நெய்வேலி என்னுமூர் பெற்றுளது
*கோவலர் - ஆயர் |