102 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
வந்த சிறுமொழிகள் வாழ வழிவகுக்கும் சந்ததிகள் நம்நாட்டில் சேராமல் செய்திடுவோம் கோழைகளாய் மோழைகளாய்க் கூன்விழுந்த நெஞ்சினராய் ஏழைகளாய் வாழ இனியும் கருதாமல் கூடித் திரண்டெழுவீர்! கொட்டிடுக போர்முரசம் நாடித் திருநாட்டில் நம்மாட்சி நாட்டிடுவோம் வாழ்க திருநாடு வாழ்க நமதுரிமை வாழ்கநம் நாட்டின் வளம். தலைப்பு:திராவிட நாட்டின் வளம் இடம்:முத்தமிழ் மாநாடு - காரைக்கால் நாள்:19-4-1959 |