கவியரங்கில் முடியரசன் | 105 |
*பூநத்தும் தேனீக்கள் கூட்டில் மொய்த்தல் போற்கிளைஞர் பெருங்குழுவாய் வீட்டில் மொய்ப்பர்; தேனொத்த வெல்லத்தை மோப்பங் கண்டு தேடிவரும் எறும்பினத்தின் சாரை போல்வார்;(6) ஆவணியில் காதணிநாள் நிகழ்த்த எண்ணி ஆய்ந்தொருநாள் தேர்ந்தெடுத்து நெஞ்சிற் கொண்டு பாவைநிகர் என்மனையாள் செவியிற் சொன்னேன்; பாய்ந்தோடி உறவினர்கள் ஆடி மாதம் போவதன்முன் தம்குடும்பம் சுற்றம் சூழப் புகுந்தார்கள்; திடுக்கிட்டுத் துணையைப் பார்த்தேன் “தேவையிலை இனியழைப்பு, செலவு மிச்சம்” என்றுரைத்தாள் தேன்மொழியாள்; திகைத்து நின்றேன் (7) சாதியினை ஒழிப்பதுநம் கடமை என்று தக்கவளைக் கலப்புமணம் செய்து கொண்டேன்; காதலினால் பூத்தமணம் உறவினர்க்குக் கடுகளவும் நறுமணமாய்த் தோன்ற வில்லை; வேதநெறி பிழையாத அன்னார் என்றன் வீட்டுக்குள் வந்துவிடின், என்முன் நின்றே ஏதமிலாச் செயலாற்றும் கொள்கை வீரர் என்றெல்லாம் பட்டங்கள் வழங்கிச் செல்வார்(8) உள்ளொன்றும் புறமொன்றும் பேசி நிற்கும் உறவினரைப் படைக்கின்ற தெய்வம் ஆகி வெள்ளைநிறம் கொண்டிங்கே உலகை ஆட்டி விளையாடும் பணநாதன் கடைக்கண் நோக்கம்
*பூநத்தும் - பூவை விரும்பும் |