108 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
குணமில்லாத் தேனீயாய்க் கொட்டி னார்கள்; கூடிவருங் காலத்துக் கூடி வந்தார் உணவோடு நலம்பெற்றார்; செல்வ மெல்லாம் ஓடிவிடுங் காலத்தில் ஓடி விட்டார்(15) இப்பொழுதும் ஒருவர்திரு மணத்துக் காக என்குடும்பத் துடன்சென்றேன்; வரவு கூற எப்பொழுதும் முன்னிற்போர் எவரும் இல்லை; என்துணைவி வெறுங்கழுத்தும் கையுங் கண்டார்; சிப்பிதரு பொத்தான்கள் இல்லாச் சட்டை சிலைநிகர்க்கும் என்மக்கள் அனைத்துங் கண்டு செப்புகின்றார் பஞ்சைஎன; ஒதுங்கி நின்றார்; சிரித்திருந்தேன் உறவினர்தம் செய்கை கண்டு(16) படுப்பதற்கோர் படுக்கையிலை பாயும் இல்லை; பக்கத்து வீட்டிலொரு திண்ணை யோரம் தடுப்பதற்கோ ஆளில்லை சாய்ந்து கொண்டேன்; தவமிருந்து பெற்றமக வொன்றை அங்கே அடிப்பதைநான் கண்டெழுந்து தடுத்து நின்றேன்; “அப்பப்பா இப்பொழுதே திருடக் கற்றுக் கொடுப்பதற்கோ அழைத்துவந்தாய்?” என்று சொல்லிக் குழந்தையின்கைக் கனியொன்றைப் பறித்துச் சென்றார் (17) பொருளுடைய பொழுதிற்றான் வந்து சூழ்ந்து போற்றுகிற உறவுமுறை வளர்ந்து காணும்; பொருளிலையேல் ஒருபொருட்டா மதியா தன்றிப் புன்மொழிகள் புகலுதற்கும் அஞ்சா தந்தோ! பொருளுளதேல் சாப்பாட்டுக் கூட்டம்; கெட்டுப் போய்விடினோ கூப்பாட்டுக் கூட்டம் என்ற பொருளுரையைக் காட்டுகிற உறவை நம்பிப் புவிதன்னில் வாழ்வதுதான் நன்றோ சொல்வீர்!(18) |