கவியரங்கில் முடியரசன் | 109 |
இப்புவியில் என்னுறவின் முறைதான் சொன்னேன் ஈண்டுள்ளோர் நல்லவர்கள் குறளிற் கூறும் ஒப்புரவு தெரிந்தவர்கள்; திருக்கு றட்கே உயர்வுதரத் தேனப்பன் என்னும் நண்பன் செப்பரிய முயற்சியினால் இங்குக் கண்ட திருக்குறளின் கழகத்தில் உறவு கொண்டோர்; நற்குடும்ப நெறியறிந்து வாழும் சான்றோர் நலமனைத்தும் பெற்றிங்கு வாழ்க! வாழ்க!(19) தலைப்பு:குறள் நெறிக் குடும்பம் - உறவினர் இடம்:குறள்விழா - காரைக்குடி நாள்:19-7-1959 |